2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாட அனுமதி மறுப்பு

Super User   / 2011 ஜூன் 19 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அடுத்த மாதம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டிகளில் தனது வீரர்கள் விளையாட அனுமதிப்பதில்லை என இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கன் கிரிக்கெட் (இலங்கை கிரிக்கெட் சபை) நடத்தும் மாகாண அணிகளுக்கிடையிலான இச்சுற்றுப்போட்டி ஜூலை 19 ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வணிகள் ஒவ்வொன்றிலும் 5 வெளிநாட்டு வீரர்களை சேர்ப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை இந்திய கிரிக்கெட் சபை (பிசிசிஐ) தலைமையகத்தில் நடைபெற்ற இந்திய பிரியமியர் லீக் கூட்டமொன்றின்போது, இலங்கைக்கு இந்திய வீரர்களை அனுப்புவது குறித்து பிசி;சிஐ தலைவர் சஷாங் மனோகர் கவலை வெளியிட்டுள்ளதாக இந்தியாவின் சண்டே  எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் பிரிமியர்லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பிசிசிஐ உயரதிகாரி ஒருவர் சண்டே எக்ஸ்பிரஸுக்கு உறுதிப்படுத்தியதாக அப்பத்திரிகைதெரிவித்துள்ளது.

'இப்போட்டிகளை யார் ஏற்பாடு செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. இந்நிகழ்வு குறித்து உத்தியோகபூர்வமான கடிதங்கள் எதுவும் எமக்கு இன்னும் கிடைக்கவில்லை. பத்திரிகைகள் மூலமாக மாத்திரமே ஸ்ரீலங்கன் பிரிமியர்லீக் போட்டிகள் குறித்து நாம் அறிந்துள்ளோம்' என அவர் கூறினார். இந்திய வீரர்கள் அதில் விளையாட மாட்டார்கள்' என அவர் கூறியுள்ளார்.

இதற்கு பதிலடியாக இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளிலிருந்து இலங்கை வீரர்களை இலங்கை கிரிக்கெட் சபை வாபஸ் பெறக்கூடும் எனவும் மேற்படி பத்திரிகை தெரிவித்துள்ளது.


  Comments - 0

 • ajan Sunday, 19 June 2011 07:07 PM

  மகிழ்ச்சி அளிக்கிறது

  Reply : 0       0

  Jeewan Sunday, 19 June 2011 08:30 PM

  ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து இலங்கை வீரர்களை முன்கூட்டியே திரும்பப் பெறப்போவதாக இலங்கை மிரட்டியமைக்கு இந்தியாவின் பதிலடியா இது?

  Reply : 0       0

  Hot water Sunday, 19 June 2011 11:00 PM

  இந்தியர்கள் இல்லாவிட்டால் என்ன விமலையும் மேர்வினையும் அணிகளில் சேருங்கள்.

  Reply : 0       0

  RISHAD Monday, 20 June 2011 05:14 PM

  இந்தியர்கள் இல்லை என்றால் பங்காளியை போட்டு விளையாடுவது தான். நெதர்லாந்து வீரர்களை போட்டு விளையாடுங்கள். நாம் யாரின் காலிலும் விழ வேண்டாம்...

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X