Super User / 2011 ஜூன் 24 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் தென்னாபிரிக்க வீரர் ஜக் கலிஸ் முதலிடம் பெற்றுள்ளார்.
இதுவரை முதலிடத்தில் இருந்த இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய பட்டியலின்படி கலிஸ் 883 புள்ளிகளையும் டெண்டுல்கர் 874 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
இலங்கை வீரர் குமார் சங்கக்கார 838 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தில் உள்ளார். மற்றொரு இலங்கை வீரரான திலான் சமரவீர 766 புள்ளிகளுடன் 7 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். திலான் சமரவீர இப்பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தமை இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பட்டியலில் இங்கிலாந்து வீரர்களான ட்ரொட் 4ஆவது இடத்திலும் அலிஸ்டயர் குக் 4 ஆவது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் வீரேந்தர ஷேவாக் 6 ஆவது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெய்ட் முதலிடம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் ஸ்வான் இரண்டாவது இடத்திலும் ஜேம்ஸ் அண்டர்சன் 3 ஆவது இடத்திலும் உள்ளனர். தென்னாபிரிக்காவின் மோர்ன் மோர்கெல் 4 ஆவது இடத்தையும் இந்தியாவின் ஸஹீர்கான் 5 ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
இலங்கை பந்துவீச்சாளர்கள்; எவரும் 10 இடங்களுக்குள் இல்லை. ரங்கன ஹேரத் 20 ஆவது இடத்திலும் அஜந்த மெண்டிஸ் 21 ஆவதுஇடத்திலும் உள்ளனர்.
14 Mar 2026
14 Mar 2026
14 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Mar 2026
14 Mar 2026
14 Mar 2026