2021 மே 18, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி பயிற்றுநர் ராஜினாமா

Super User   / 2011 செப்டெம்பர் 20 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் டிம் நீல்சன் அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் முடிவுற்றபின்  டிம் நீல்சன்  இவ்வறிவிப்பை விடுத்தார். 

43 வயதான நீல்சன், 2007 ஆம் ஆண்டு ஜோன் புச்சானனுக்குப் பின்னர் அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுநராக பதவியேற்றவர். அவருக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையினால் மற்றொரு சிரேஷ்ட பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை நீல்சனின் விலகலையடுத்து தென்னாபிரிக்க சுற்றுலாவுக்கான அவுஸ்திரேலிய அணிக்கு இடைக்கால பயிற்றுநர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளனர்.

தற்போதைய உதவிப் பயிற்றுநர்களான ஜஸ்டின் லாங்கர், ஸ்டீவ் றிக்ஸன் ஆகியோரில் ஒருவர் இப்பதவியைப் பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .