2021 மே 06, வியாழக்கிழமை

ஐ.சி.சி. தரவரிசையில் சங்கக்கார, ஹேரத் முன்னேற்றம்

Super User   / 2011 செப்டெம்பர் 21 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் டெஸ்ட் வீரர்களுக்கான தரப்படுத்தலில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார, சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் ஆகியோர் முன்னேற்றமடைந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் 223 ஓட்டங்களைப் பெற்ற குமார் சங்கக்கார டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் இங்கிலாந்தின் அலஸ்டெயர் குக், இயன் பெல் ஆகியோருடன் இரண்டாமிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இத்தொடரில் 16 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத், டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் இடங்களைக் கடந்து 10 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தென்னாபிரிக்காவின் ஜக் கலிஸ் துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் முதலிடத்திலும், அதே அணியைச் சேர்ந்த டேல் ஸ்டெய்ன் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளனர்.

அதேவேளை இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்கு முன் 5 ஆவது இடத்திலிருந்த அவுஸ்திரேலிய அணி 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இப்பட்டியலில் இலங்கை 5  ஆவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து முதல் இடத்திலும் தென்னாபிரிக்கா 2 ஆவது இடத்திலும் இந்தியா 3 ஆவது இடத்திலும் உள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .