Super User / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி விபரம் இன்று வியாழக்கிமை அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வணியில் சிரேஷ்ட வீரர்களான சச்சின் டெண்டுல்கர், யுவராஜ்சிங், வீரேந்தர் ஷேவாக், ஆகியோர் இடம்பெறவில்லை. இவர்கள் காயங்களிலிருந்து முற்றாக குணமடையாமையே இதற்கான காரணமாகும்.
இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சுற்றுப்போட்டி ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 25 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன.
இந்திய அணி கடந்த ஏப்ரல் மாதம் உலகக்கிண்ணத் தொடரை வென்ற பின்னர் சொந்த மண்ணில் விளையாடும் முதலாவது ஒருநாள் சுற்றுப்போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
வேகப்பந்துவீச்சாளர்களான ஸஹீர்கான், இஷாந்த் சர்மா, முனாப் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை.
சிரேஷ்ட சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோரும் அணியில் இடம்பெறத் தவறியுள்ளனர்.
மிதவேக பந்துவீச்சாளர் எஸ்.அரவிந்த், சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சர்மா ஆகியோர் முதல் தடவையாக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை நெருங்கியுள்ளனர்.
இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த கௌதம் காம்பீர் மீண்டும் அணியில் அணியில் இடம்பெற்றுள்ளார்.
இத்தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி விபரம்: எம்.எஸ்.டோனி (தலைவர், விக்கெட் காப்பாளர்), கௌதம் காம்பீர, பார்த்தீவ் பட்டேல், அஜின்க்யா ரஹானே, வீரட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரவீந்தர் ஜடேஜா, ஆர்.அஸ்வின், வருன் ஆரோன், உமேஷ் யாதவ், வினய்குமார், எஸ். அரவிந்த், ராகுல் சர்மா, மனோஜ் திவாரி, பிரவீன் குமார்.
2 hours ago
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago
7 hours ago