2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

பிடிகளைத் தவறவிட்டது பாகிஸ்தான்; போராடுகிறது இலங்கை அணி

Super User   / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்  போட்டியின் நான்காவது நாளான இன்று வெள்ளிக்கிழமை ஆட்டமுடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 295 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

குமார் சங்கக்கார 168 ஆட்டமிழக்காமல் ஓட்டங்களைப் பெற்றார். இது டெஸ்ட் போட்டிகளில் அவர் பெற்ற 26 ஆவது சதமாகும். லஹிரு திரிமான்ன 68 ஓட்டங்களைப் பெற்றர். மஹேல ஜயவர்தன 4 ஓட்டங்களுடனும், திலகரட்ன தில்ஷான் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

ஏஞ்சலோ மத்திவ்ஸ் 22 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.  பிரசன்ன ஜயவர்தன 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் உமர் குல் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்றைய ஆட்டத்தின்போது பாகிஸ்தான்; அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்ட போதிலும் அவ்வணியின் களத்தடுப்பு மிக மோசமாக இருந்தது. குறைந்தபட்சம் 5 பிடிகளை பாகிஸ்தான் களத்தடுப்பாளர்கள் தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.

5 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில் இலங்கை அணி தற்போது 16 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது. நாளை இப்போட்டியின் இறுதிநாளாகும்.


 


  Comments - 0

  • Niyas Mohamed Sunday, 23 October 2011 01:45 AM

    அல்ஹம்துலில்லாஹ் இலங்கை வெற்றிபெற எங்களது வாழ்த்துகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--