2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

காம்ப்ளியின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும்: இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர்

Super User   / 2011 நவம்பர் 19 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றிருக்கலாம் என இந்திய  அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி கூறியுள்ளமை குறித்து இந்திய கிரிக்கெட் சபை விசாரணை நடத்த வேண்டும் என இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மாகென் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் சபை இது குறித்து விசாரணை நடத்தாவிட்டால் தனது அமைச்சு இதில் தலையிட்டு சுயுமாக விசாரணை நடத்தும் எனவும் அவர்கூறியுள்ளார்.

' அணியின் வீரர் ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தும்போது அது குறித்து விசாரிக்க வேண்டும். உண்மையாக என்ன நடந்து என்பதை அறிந்துகொள்ள இந்நாட்டின் மக்கக்கு உரிமை உள்ளது. வீரர் ஒருவரின் உண்மையாக இருந்தாலும் பொய்யாக இருந்தாலும் அது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்' என அமைச்சர் அஜய் மாகென் கூறியுள்ளார்.

காம்ப்ளி கூறிய விடயங்கள் தனக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவை உண்மையாக இருந்தால், கிரிக்கெட் விளையாட்டுக்கு அது மிக துரதிஷ்டவசமானவை' என அமைச்சர் மாகென் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X