2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

இன்னும் ஒரு சுற்றுலாவின்பின் எதிர்காலம் குறித்து தீர்மானிப்பேன்: தில்ஷான்

Super User   / 2011 நவம்பர் 21 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது எதிர்காலம் குறித்து தீர்மானிப்பதற்கு முன் இன்னும் ஒரேயொரு சுற்றுப்போட்டியில் இலங்கை அணிக்கு தலைமை தாங்க விரும்புவதாக இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர் திலகரட்ன தில்ஷான் இன்று கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் இலங்கை அணியுடனான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி தனது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் தில்ஷான் இவ்வாறு கூறியுள்ளார்.

35 வயதான தில்ஷான் கடந்த உலகக்கிண்ணத் தொடரின் பின்னர் இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள தென்னாபிரிக்க சுற்றுலாவின்போது தான் தலைவராக நியமிக்கப்படுவாரா என்பது தனக்குத் தெரியவில்லை என தில்ஷான் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க சுற்றுலாவில் இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

'அவர்களின் (தேர்வுக் குழுவினரின்) கருத்து என்ன என்பது தெரியவில்லை. ஆனால் நான் தென்னாபிரிக்க சுற்றுலா வரைக்கும் தலைவராக நியமிக்கப்பட்டேன். எனவே நான் நீக்கப்படுவேன் என எண்ணவில்லை. ஆனால் தென்னாபிரிக்க சுற்றுலாவின்பின் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்' என அவர் கூறினார்.

"அணித்தலைவர் என்ற வகையில் நான் வீரர்களின் ஆட்டத்தில் மாற்றம் எதையும் ஏற்படுத்த முடியாது. ஓர் அணி என்ற வகையில் நாம் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை பாகிஸ்தானுடனான நான்காவது போட்டியில் இலங்கை அணியின் 7 விக்கெட்டுகள் 19 ஓட்டங்களில் வீழ்ந்ததை நம்பமுடியாதுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0

 • sakeena Tuesday, 22 November 2011 04:22 AM

  துயர் கண்டு துவண்டு விடாதே...!

  Reply : 0       0

  meenavan Tuesday, 22 November 2011 04:23 AM

  தலைமை பொறுப்பு இலகுவானதல்ல என உணர்ந்துள்ள டில்சானுக்கு இன்னுமொரு வாய்ப்பை கொடுக்கலாம்,முத்தையாவின் இழப்பு ஈடு செய்யபடாத நிலையில் டில்சானுக்கு தலைமை பதவி வழங்கப்பட்டதும் கவனிக்கதக்கது.

  Reply : 0       0

  Kethis Tuesday, 22 November 2011 04:30 AM

  அவுஸ்திரேலியாவே தென்னாபிரிக்காவில் அடிவாங்கி தப்பி பிழைத்துள்ளது. நீங்கள் தென்னாபிரிக்க சுற்றுலாவின் பின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கப் போகிறீர்களா? கஷ்டம்தான்.

  Reply : 0       0

  nawas Tuesday, 22 November 2011 06:01 AM

  தம்பி நீங்க சும்மா ரீல் விடாதீங்க. உங்கள் தலைமைல நமது அணி ஒரு நாளும் வெற்றி பெறாது.

  Reply : 0       0

  nirosproud be sri lankan Tuesday, 22 November 2011 09:35 AM

  முன்னதாகவே தெரிந்த விடயம்தான். டதில்ஷான் தலைமை இலங்கை அணிக்கு ஒருபோதும் வெற்றி அளிக்காது என்று
  இருந்தும் முட்டாள் தனமான தீர்மானங்களால் தலைமை கொடுக்க பட்டது வருத்தத்துக்கிற விடயம். இனியாவது நாட்டுக்காக வேண்டி நல்ல தீர்மானங்கள் அதிகார சபையினால் எடுக்கப்பட வேண்டும் இலங்கை அணிக்கு தற்போதைய நிலையில் சங்கா.., மகிலாவை.. தவிர வேறு யாரும் தலைமைக்கு தகுதி உடையவர் இல்லை .

  Reply : 0       0

  shalim Tuesday, 22 November 2011 02:14 PM

  தில்ஷானுக்கு தென்னாபிரிக்க சுற்றுலா வரை வாய்ப்பு வழங்கலாம். இலங்கைக்கு இப்போது தேவையாக உள்ளது நிலையான மத்திய வரிசை துடுப்பாட்டமே. அது சீர்செய்யப்படாத வரை இலங்கையின் தோல்வியை தவிர்க்க முடியாது.

  Reply : 0       0

  pasha Tuesday, 22 November 2011 02:15 PM

  தில்சானை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பவர்கள் யாரை தலைவராக்க விரும்புகின்றார்கள்? யார் தலைவர் ஆனாலும் தோல்வி தோல்விதான் வேண்டும் என்றால் பங்களாதேசம் சிம்பாவே போன்ற நாடுகளுடன் போட்டிகளை நடத்தி வெட்ரி பெறலாம். வேண்டும் என்றால் பங்களாதேசம் சிம்பாப்வே போன்ற நாடுகளுடன் போட்டிகளை நடத்தி வெற்றி பெறலாம்.

  Reply : 0       0

  Ganesh Tuesday, 22 November 2011 04:51 PM

  Dear Dilshan, if you be as a player I am sure you will have good performance now you are so confuse,

  Mr. Kethis.... South Africa good but not in Australia level, by chance they win the Asus, see they win world cup many time but SA ?????? so do not forget past nowadays Mr. Hasim Amla good performance.

  Reply : 0       0

  Moon Tuesday, 22 November 2011 04:56 PM

  ரொம்ப நல்லது உன்னால் ஜெய்க்க முடியும் ஆனால், நீங்கள் தலைமைப் பதவியை விட்டு வெளியே வந்து உங்களுடைய வழமையான துடுப்பாட்டத்தை ஆரம்பிக்கணும். அப்போது இன்னும் நிறைய அனுபவங்கள் கிட்டும் .அதன் பின் அணியை வழிநடத்தும் பொறுப்பை நீங்களாக ஏற்றுக்கொள்க .

  Reply : 0       0

  Winter Tuesday, 22 November 2011 05:29 PM

  ஷார்ஜா தொடரில் டில்ஷனை மட்டும் குறை சொல்ல முடியாதுஇ துடுப்பாட்ட வீரர்கள் யாருமே சரியாக பிரகாசிக்கவில்லை.
  அப்புறம் எப்டி சீரிஸ் வின் பண்றதாம்?

  Reply : 0       0

  Rasmin Tuesday, 22 November 2011 07:25 PM

  இலங்கை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களின் ஆட்டத் திறன் இன்னும் திறமையடைய வில்லை. இவர்களின் பிரகாசத்திலேயே வெற்றி தங்கியுள்ளது .....

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .