2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

இலங்கை அணியின் வீழ்ச்சியா? பாகிஸ்தான் அணியின் எழுச்சியா?

A.P.Mathan   / 2011 நவம்பர் 24 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவடைந்து உள்ள நிலையில், இலங்கை அணியின் எதிகாலம் கேள்விக்குறியான நிலையில் உள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. இலங்கை அணியின் சமநிலை தன்மை இல்லை என்பது மிக முக்கியமான விடயமாக உள்ளது... இலங்கை அணியில் நிரந்தரமாக உள்ள 11 வீரர்கள் யார் என்று கேட்டால் இலங்கை அணியின் ரசிகரே யோசிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இந்த இடத்தில் தான் இலங்கை தெரிவுக்குழு பிழை விட்டு வருகிறது. தொடர்ச்சியாக அணியில் மாற்றங்கள் கொண்டு வருதல். தொடர்ச்சியாக வீரகளுக்கு அணியில் வாய்ப்பு வழங்குவது இல்லை. இந்த நிலைமை புதிய வீரர்களை உருவாக்குவதில் சிக்கல்களை உருவாக்கும். இறுதியாக 5ஆவது போட்டியில் சாமர சில்வாவிற்கு இடம் வழங்கப்பட்டது. இவருக்கு தொடர்ச்சியாக எத்தனையோ வாய்ப்புகள் வழங்கப்பட்டும் சொதப்பி வருகிறார். இந்த நிலையில் எவ்வாறு புதிய இளம் வீரர்களை உருவாக்குவது? 

இந்த போட்டி தொடரில் கோசல குலசேகர முதல் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அவருக்கு அது முதல் போட்டி. ஓட்டம் ஏதும் பெறாமல் ஆட்டம் இழந்தார். அடுத்த போட்டியில் அவர் இல்லை. இந்த தொடரில் பின் வாய்ப்பும் இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

உலக கிண்ண போட்டி தொடரின் இறுதி போட்டிக்கு வந்த ஒரு அணி 8 மாத கல இடை வெளிக்குள் இவ்வளவு மோசமான பெறுபேறுகளை காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது தான். இந்த அணியில் வீரர்களில் பிழை சொல்லவதில் எந்த நியாயமும் இருக்க முடியாது. அவர்கள் தங்களால் இயலுமானதை செய்து வருகிறார்கள்.  

இலங்கை அணியின் பெறுபேறுகளை பொறுத்தவரை குமார் சங்கக்கரா மாத்திரமே தெரிகிறார். மஹேல போராடி இருந்தார். பந்து வீச்சில் மாலிங்க மாத்திரமே ஓரளவு பிரகாசித்து இருந்தார். சங்கக்கரா 5 போட்டிகளில் 191 ஓட்டங்கள், 38.20 என்ற சராசரி. மஹேல 4 போட்டிகளில் 36.50 என்ற சராசரியில் 143 ஓட்டங்கள். லசித் மாலிங்க 5 போட்டிகளில் 7  விக்கெட்டுகள்.

எப்போது வெல்லும் - தோற்கும் என தெரியாத பாகிஸ்தான் அணி மிக அபாரமான ஒரு வெற்றித் தொடரினை தனதாக்கி கொண்டுள்ளது. துடுப்பாட்டம், பந்து வீச்சு என்று சகல துறை பெறுபேறுகளையும் காட்டி நல்ல முறையில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக தன் ஓய்வு அறிவித்தலை வாபஸ் பெற்று மீண்டும் வந்த அப்ரிடியின் பந்து வீச்சு, துடுப்பாட்டம் என இரண்டிலும் கலக்கி - தன் மீள் வருகையை மிக அபாரமாக அறிவித்தார். தொடரின் வெற்றி நாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார் அப்ரிடி. துடுப்பாட்டத்தில் அவருடன் இணைந்து உமர் அக்மல், யூனுஸ் கான் ஆகியோரும் பந்து வீச்சில் சயிட் அஜ்மலும் இணைந்து இலங்கை அணியை உருட்டி எடுத்து விட்டார்கள். ஆனாலும் மற்றைய வீரர்களும் கூட நல்ல முறையில் பிரகாசித்து இருந்தார்கள்.

பாகிஸ்தான் அணி - ஐக்கிய அரபு ராச்சியத்தில் விளையாடினாலும் அவர்களுக்கு இந்த மைதானங்கள் தங்கள் சொந்த மைதானங்களிலும் பார்க்க வாசியான மைதானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதையும் அவர்கள் சரியான முறையில் பயன்படுத்தியிருக்கிறார்கள். பாகிஸ்தான் அணி சார்பாக சஹிட் அப்ரிடி 5 போட்டிகளில் 4இல் துடுப்பெடுத்தாடி 30.75 என்ற சராசரியில் 123 ஓட்டங்களையும் 13 விக்கெட்டுகளையும் பெற்றுக்கொள்ள, உமர் அக்மல் 4 இன்னிங்க்சில் 161 ஓட்டங்களையும், யூனுஸ் கான் 150 ஓட்டங்களையும் பெற - பந்து வீச்சில் சயிட் அஜ்மல் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

உலக கிண்ணத்துக்கு பின்னர் இலங்கை அணி இதுவரையும் முக்கிய அணிகளுடன் ஒரு தொடரையும் வெல்லவில்லை. விளையாடிய 17 போடிகளில் 6இல் வெற்றி, 5இல் தோல்வி, 1 கை விடப்பட்ட போட்டி. பாகிஸ்தான் அணியுடன் அடைந்த 4 இற்கு 1 என்பதே மோசமான தோல்வியும் கூட. 

பாகிஸ்தான் அணியை பொறுத்த வரையில் இந்த வருடத்தில் எந்த ஒரு தொடரிலும் தோல்வியை சந்திக்கவில்லை என்பது முக்கியமான விடயமே. ஆனால், உலக கிண்ணத்துக்கு பின் விளையாடிய பலமான அணி இலங்கை அணிதான். எனவே, தாங்கள் பலமான நிலையில் இருக்கிறோம் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் பாகிஸ்தான் அணியினர்.

இதன் அடிப்படையில் தரப்படுத்தலிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 119 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்த இலங்கை அணி 7 புள்ளிகளை இழந்து நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள  அதேவேளை - பாகிஸ்தான் அணி 7 புள்ளிகளை பெற்று 108 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த தொடரை பொறுத்தவரையில் பாகிஸ்தானுக்கு மேலதிக புத்துணர்ச்சி கிடைத்திருக்கிறது என்பது சந்தேகம் அல்ல. ஆனால், இலங்கை அணிக்கு..??? 

இப்படி ஒரு நிலையில் அடுத்து தென் ஆபிரிக்க தொடருக்கு செல்ல தயார் ஆகின்றது இலங்கை அணி. அங்கு சென்று இலங்கை அணி என்ன செய்யப்போகிறது? இப்படி பல கேள்விகள் இருக்கின்ற நிலையில், அணியை கட்டி எழுப்ப வேண்டும் என்பது இலங்கை கிரிக்கெட்டுக்கும், தெரிவு குழுவுக்கும் ஆன பொறுப்பு. ஆனால் அவை ஒழுங்காக இல்லாத பட்சத்தில் எப்படி கட்டி எழுப்ப முடியும்??? இலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் முடிந்து புதிய சபை உருவாகினால் மாற்றங்கள் வரும் என எதிர் பார்க்கலாம்.

சாதனை அணியின் சரிவுக்கு தெரிவுக்குழு காரணமாக அமையாமல் இருந்தால் சந்தோஷம்தான். பொறுத்திருந்து பார்ப்போம் இலங்கை அணி புத்தெழுச்சி பெறுமா என்று..?


  Comments - 0

 • MHM RISVI Friday, 25 November 2011 03:54 PM

  இலங்கை அணி தோல்விக்கு காரணம் அணியின் கப்டன் தான்.

  Reply : 0       0

  Nishan Friday, 25 November 2011 04:17 PM

  சிறப்பான பதிவு அண்ணா... இலங்கை அணி புத்துயிர் பெற்று மீண்டெழ எனது வாழ்த்துக்கள்..

  Reply : 0       0

  மு.சண்முகன் Friday, 25 November 2011 05:31 PM

  அருமையான ஆக்கம்.

  Reply : 0       0

  ullooran Friday, 25 November 2011 07:17 PM

  உண்மையிலே இந்தச்செய்தியை எழுதியவரை நாம் வாழ்த்தியே ஆக வேண்டும். ஏனெனில் இதில் குறிப்பிட்டவாரே இலங்கை அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புக்கள் சரியாக வழங்கப்படுவதில்லை என்பதை நாம் பிரதான காரனமாகக் கொள்ளலாம்.

  Reply : 0       0

  Winter Friday, 25 November 2011 08:46 PM

  முதல் மூன்று பட்ஷ்மன் படு மோசமான ஆட்டம் தோல்விக்கு முக்கிய கரணம்.

  Reply : 0       0

  thaju Sunday, 27 November 2011 01:50 AM

  இலங்கை அணியில் பந்து வீச்சாளர்கள் இல்லை. இது தான் இலங்கை அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .