Super User / 2011 நவம்பர் 28 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனம் நடத்தும் மகளிர் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஷின் 2011 தொடரின் இறுதிப்போட்டி கொழும்பு சி.ஆர். அன்ட் எவ்.சி. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படை அணிகள் இந்த இறுதிப் போட்டியில் பங்குபற்றுகின்றன.
இவ்விரு அணிகளுடன் இலங்கை பொலிஸ், கடற்படை, குருநாகல் விளையாட்டுக் கழகம், கம்பஹா விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகளும் இத் தொடரில் பங்குபற்றின.
ஆரம்பச் சுற்றில் 6 கழகங்களும் ஒன்றையொன்று எதிர்த்தாடின.
அதன்பின் இராணுவ அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது. பொலிஸ் அணி அரையிறுதிப் போட்டிக்கு தெரிவுசெய்ப்பட்டது.
எனினும் காலிறுதிப் போட்டியில் குருநாகல் அணியை வெற்றி கொண்ட விமானப்படை அணி அரையிறுதியில் பொலிஸ் அணியையும் வீழ்த்தியது. அதனால் விமானப்படை, இராணுவ அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

48 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
50 minute ago