2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

தர்ஷினி சிவலிங்கம் தலைமையில் சிங்கப்பூர் செல்லும் இலங்கை வலைப்பந்தாட்ட அணி

Super User   / 2011 நவம்பர் 29 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள 6 நாடுகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டிக்காக பல புதுமுகங்களைக் கொண்ட இலங்கை குழாம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

டிசெம்பர் 5 முதல் 11 ஆம் திகதிவரை இச்சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது.  இலங்கை பிஜி, நமீபியா, பப்புவா நியூகினியா, மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய அணிகள் இப்போட்டிகளில் பங்குபற்றவுள்ளன.

ஆசியாவின் மிகச் சிறந்த வலைப்பந்தாட்ட கோல்புகுத்துநரான 6 அடி 9 அங்குல உயரமான வீராங்கனையான தர்ஷினி சிவலிங்கம் இம்முறை இலங்கை அணிக்கு தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையைச் சேர்ந்த அஸ்வினி பாக்கியராஜா எனும் மற்றொரு தமிழ் வீராங்கனையும் இக்குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இலங்கை அணியின் பயிற்றுநராக ஹைசிந்த் ஜயசிங்க விளங்குகிறார். உதவி பயிற்றுநராகவும் முகாமையாளராகவும் தீப்தி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வீராங்கனைகள் விபரம்: தர்ஷினி சிவலிங்கம் (தலைவி), சேமினி அல்விஸ், சுரேகா குமாரி, விஷாகா ஜயசூரிய, விராஜி சமரிக்கா, தீபிகா அபயகோன், ஷாலிகா இராங்கனி,  அஸ்வினி பாக்கியராஜா, விஸ்னா பெர்னாண்டோ, கயானி திசாநாயக்க, ஜனனி பெரேரா, ஹசித மெண்டிஸ்.(Pix by: Romesh Silva)


 


  Comments - 0

 • asker Wednesday, 30 November 2011 08:41 PM

  ஏன் தமிழ் பெயர்களை குறிப்பாக கூறுகிறீர்கள் . மற்றவர்கள் தரம் குறைந்தவர்களா ?

  Reply : 0       0

  thamilan Wednesday, 30 November 2011 09:01 PM

  தமிழ் பெயர்களை குறிப்பாக கூறுவது மற்றவர்களை தாக்குவதற்கு இல்லை . சிறுபான்மை சமூகமும் விளையாடலாம் என்பதே. முஸ்லிம் சமூகத்துக்கும் அது பொருந்தும்.

  Reply : 0       0

  neethan Thursday, 01 December 2011 04:19 AM

  தர்சினிக்கு வலைபந்தாட்ட குழு தலைமை பதவியை கொடுத்தது போல, கிரிகெட் உலக சாதனை ஜாம்பவான் முரளிக்கும் கிரிகெட் தலைமை பதவியை அவரது இறுதி டெஸ்ட் ஆட்டத்திலாவது கொடுக்காமல் விட்டார்களே?

  Reply : 0       0

  asker Thursday, 01 December 2011 04:23 PM

  முரளிக்கு தலைமை தாங்க முடியாது. இது அவரே ஒப்புகொண்டது.

  Reply : 0       0

  Maheswaran Thilipan Friday, 02 December 2011 04:41 PM

  எல்லாம் இருகட்டும் நீங்க எத thalama thanga pooringa?

  Reply : 0       0

  Kethis Wednesday, 30 November 2011 07:51 PM

  போட்டிகளின் முடிவிலும் இப்படி குதூகலிக்க வாழ்த்துக்கள்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X