2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேசக் கிரிக்கெட் சபை சிறப்பாகச் செயற்படவில்லை: டெரன் ஹெயார்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

6 நடுவர்கள் போட்டிகளில் தவறான தீர்ப்புக்களை வழங்கவும், போட்டி பற்றிய விபரங்களை வெளியிடவும் சம்மதிப்பது குறித்த செய்தி வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசக் கிரிக்கெட் சபை ஊழலை ஒழிப்பதற்கு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் சர்வதேச நடுவரான டெரல் ஹெயார் தெரிவித்துள்ளார்.

சர்வதேசக் கிரிக்கெட் சபை எப்போதும் ஏதாவதொரு விடயம் இடம்பெற்ற பின்னர் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வழக்கத்தையே கொண்டுள்ளதாகத் தெரிவித்த டெரல் ஹெயார், முன்னெச்சரிக்கையாக தவறுகளைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை சர்வதேசக் கிரிக்கெட் சபை மேற்கொள்வதில்லை எனவும் தெரிவித்தார்.

சர்வதேசக் கிரிக்கெட் சபை தங்களுக்கு போதிய அதிகாரங்கள் கிடையாது எனவும், பொலிஸ் போன்று தொலைபேசிகளை ஒட்டுக் கேட்க முடியாது எனத் தெரிவித்து வருவாகவும் தெரிவித்த டெரல் ஹெயார், அந்த விளக்கத்தைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

ஊழல், தவறுகளை ஒழிக்க வேண்டுமானால் சர்வதேசக் கிரிக்கெட் சட்டத்தைத் தாண்டிச் செயற்படும் இயல்பைக் கொண்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்த டெரன் ஹெயார், அவ்வாறு செயற்பட்டாலே கிரிக்கெட் போட்டி ஊழல்கள், தவறுகளின்றி இடம்பெறுவதை உறுதிசெய்யலாம் எனவும் தெரிவித்தார்.

முத்தையா முரளிதரன் பந்தை எறிகிறார் என நடுவராகத் தெரிவித்து சர்ச்சைகளை ஏற்படுத்திய டெரல் ஹெயார், நடுவர்கள் இவ்வாறு செயற்படுவதற்கு இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் ஆரம்பம் காரணம் எனவும், அதன் ஆரம்பத்தின் பின்னர் இவ்வாறான விடயங்கள் இடம்பெறும் என்பதைத் தான் எதிர்பார்த்திருந்ததாகவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .