2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

நியூசிலாந்திற்கெதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

A.P.Mathan   / 2012 நவம்பர் 09 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹேல ஜெயவர்தன தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வணியில் தரிந்து கௌஷால் புதுமுக வீரராகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

15 வீரர்கள் கொண்ட குழாமாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிக்கப்பட்டுள்ள இவ்வணியில் இலங்கையின் வழக்கமான வீரர்களே இடம்பெற்றுள்ளனர்.

துடுப்பாட்ட வீரர்களாக மஹேல ஜெயவர்தன, அன்ஜலோ மத்தியூஸ், குமார் சங்கக்கார, திலகரட்ண டில்ஷான், தரங்க பரணவிதான, பிரசன்ன ஜெயவர்தன, டினேஷ் சந்திமால் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பந்துவீச்சாளர்களாக சுராஜ் ரந்தீவ், ரங்கன ஹேரத், நுவான் குலசேகர, சானக வெலகெதர, ஷமின்ட எரங்க, தம்மிக்க பிரசாத், தரிந்து கௌஷால் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிடத்தக்க வீரர்களாக திஸர பெரேரா, லஹிரு திரிமன்ன ஆகியோருக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணி:

மஹேல ஜெயவர்தன, அன்ஜலோ மத்தியூஸ், குமார் சங்கக்கார, திலகரட்ண டில்ஷான், தரங்க பரணவிதான, திலான் சமரவீர, பிரசன்ன ஜெயவர்தன, சுராஜ் ரந்தீவ், ரங்கன ஹேரத், டினேஷ் சந்திமால், நுவான் குலசேகர, சானக வெலகெதர, ஷமின்ட எரங்க, தம்மிக்க பிரசாத், தரிந்து கௌஷால்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .