2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

சச்சினுக்கெதிராகப் பந்துவீசுவதை விரும்புகிறேன்: ஜேம்ஸ் அன்டர்சன்

A.P.Mathan   / 2012 நவம்பர் 12 , பி.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கருக்கெதிராகப் பந்துவீசுவதைத் தான் விரும்புவதாக இங்கிலாந்து அணியின் ஆரம்பப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் தெரிவித்துள்ளார். சவால்களை எதிர்கொள்ள விரும்புவதாலேயே சச்சினுக்கெதிராகப் பந்துவீசத் தான் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இந்தியாவில் வைத்து 4 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றவுள்ளது. அத்தொடர் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே ஜேம்ஸ் அன்டர்சன் இவ்வாறு தரிவித்துள்ளார்.

மிகச்சிறப்பானவர்களுக்கெதிராக தங்களைப் பரிசோதித்துக் கொள்வதை விரும்புவதாலேயே சச்சின் டெண்டுல்கருக்கெதிராகப் பந்துவீசுவதை விரும்புவதாகத் தெரிவித்த ஜேம்ஸ் அன்டர்சன், அதன் மூலமே தங்களது நிலையை அறிந்து கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகச் சச்சின் டெண்டுல்கர் காணப்படுகிறார் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் கிடையாது எனத் தெரிவித்த ஜேம்ஸ் அன்டர்சன், சிலவேளைகளில் சச்சின் டெண்டுல்கரே கடந்த 20இற்கும் மேற்பட்ட வருடங்களில் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரராகக் காணப்படலாம் எனத் தெரிவித்தார்.

எனினும் சச்சின் டெண்டுல்கருக்கெதிராகப் போட்டிகளில் பங்குபற்றும் போது மைதானத்தில் வைத்து அவருக்கு அதிக மரியாதை வழங்க முடியாது எனத் தெரிவித்த ஜேம்ஸ் அன்டர்சன், அவரை ஆட்டமிழக்க வைக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .