2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

டோணிக்கு ஆதரவு வழங்குகிறார் ட்ராவிட்

A.P.Mathan   / 2012 நவம்பர் 13 , மு.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவில் வைத்துப் பெறப்பட்ட தோல்விகளுக்குப் பின்னரும் இந்திய அணியை வழிநடத்துவதற்குரிய சரியான ஒருவராக மகேந்திரசிங் டோணியே இன்னமும் காணப்படுவதாக இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் வைத்து டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கிலும், அவுஸ்திரேலியாவில் வைத்து 0-4 என்ற கணக்கிலும் தோல்வியடைந்திருந்தது. அதன் காரணமாக இந்திய அணி மீது அழுத்தங்கள் அதிகரித்ததோடு மகேந்திரசிங் டோணி மீதான அழுத்தங்களும் அதிகரித்திருந்தன.

எனினும் கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் ட்ராவிட், இந்தியாவை வழிநடத்தக்கூடிய சிறந்த தலைவராக மகேந்திரசிங் டோணியே காணப்படுவதாகவும், ஆனால் டோணியின் தலைமைத்துவ வேலைப்பழுவைக் குறைப்பதற்கான முடிவுகளைத் தேர்வாளர்கள் எடுக்க வேண்டும் என ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றில் ஏதாவதொன்றின் தலைமைத்துவத்திலிருந்து டோணியை விடுவிப்பதன் மூலம் டோணியின் சிறந்த திறமைகளை வெளிக்கொணரலாம் எனத் தெரிவித்த ராகுல் ட்ராவிட், விக்கெட் காப்பிலும், துடுப்பாட்டத்திலும் அவரின் சிறப்பான திறமைகள் அதன் மூலம் வெளிப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

தன்னைப் பொறுத்தவரை மகேந்திரசிங் டோணியைச் சிறந்த வீரராகப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்த ராகுல் ட்ராவிட், இந்தியாவிற்காக துடுப்பாட்ட வீரராகவும், விக்கெட் காப்பாளராகவும் டோணியால் அதிகளவு பங்களிப்பை வழங்க முடியும் எனக் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் இடம்பெறவுள்ள இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான தொடர்களுக்குத் தனக்குத் தேவையான வீரர்களை அணியில் சேர்ப்பது குறித்து டோணி கவனம் செலுத்தும் அதேவேளை, நீண்ட கால நோக்கில் தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடர் தொடர்பாகத் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் ட்ராவிட் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .