2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

மாற்று வீரருக்கு ஆதரவை வழங்குகிறார் ஜே.பி.டுமினி

Super User   / 2012 நவம்பர் 13 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்ரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும்  அவுஸ்ரேலிய அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ற் போட்டியின் போது காயமடைந்துள்ள தென்னாபிரிக்க அணியின் மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரர் ஜே.பி.டுமினிஇ தனக்குப் பதிலாகத் தெரிவாகியுள்ள வீரருக்குத் தனது வாழ்த்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இப்போட்டியில் முதலில் தென்னாபிரிக்க அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்திருந்தது. முதல்நாள் முடிவில் தென்னாபிரிக்க அணி 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்திருந்த நிலையில் ஜே.பி.டுமினிக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்புக் கிடைத்திருக்கவில்லை.

ஆனால் முதல்நாள் முடிவில் இடம்பெற்ற பயிற்சிகளின் போது அவரது கணுக்கால் தசையில் உபாதை ஏற்பட்டு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குக் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ஜே.பி.டுமினி இற்குப் பதிலாக டீன் எல்கர் தென்னாபிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அத்தோடு பஃப் டு பிளெஸிஸ் ஏற்கனவே தென்னாபிரிக்கக் குழாமில் காணப்படுகிறார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள ஜே.பி.டுமினி,

"தனக்குப் பதிலாக அடுத்த போட்டியில் பங்குபற்றவுள்ள வீரருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கிடைக்கும் வாய்ப்பைத் தெரிவாகும் வீரர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த ஜே.பி.டுமினி, இவ்வாறான வாய்ப்புக்கள் அடிக்கடி கிடைக்கப்பெறுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தனக்குப் பதிலாக அடுத்த போட்டியில் பங்குபற்ற வாய்ப்புள்ள வீரர்களான டீல் எல்கர், பஃப் டு பிளெஸிஸ் அல்லது விக்கெட் காப்பாளர் தமி சொலக்கிலே ஆகியோர் மிகத் தரமான வீரர்கள் எனத் தெரிவித்த ஜே.பி.டுமினி அவர்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைப்பது மிகவும் பொருத்தமானது" எனவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .