2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

முதலாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவன் ஃபின் இல்லை

A.P.Mathan   / 2012 நவம்பர் 14 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும், இந்திய அணிக்குமிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் பங்குபெற மாட்டார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி பங்குகொண்ட முதலாவது பயிற்சிப் போட்டியின் போது காலில் காயமடைந்த ஸ்டீவன் ஃபின் தொடர்ச்சியாகக் குணமடைந்து வந்த போதிலும், அவர் முழுமையாகக் குணமாகாத நிலையிலேயே அவர் அணியில் சேர்க்கப்பட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அஹமதாபாத்தில் ஆரம்பிக்கவுள்ள போட்டியில் ஸ்டீவன் ஃபின் பங்குபற்ற மாட்டார் என உத்தியோகபூர்வமாக அறிவித்த இங்கிலாந்து அணியின் தலைவர் அலஸ்ரெயர் குக், ஃபின் இற்கு ஏற்பட்ட காயத்தினை அடுத்து அவரை நாளை ஆரம்பமாகவுள்ள போட்டியில் பங்குபெறச்செய்வது அதிக ஆபத்தானது எனத் தெரிவித்தார்.

30ஆம் திகதி தனது தொடைப்பகுதியில் உபாதைக்குள்ளான ஸ்டீவன் ஃபின், கடந்த சில நாட்களாகப் பயிற்சிக்குத் திரும்பி பந்துவீச ஆரம்பித்திருந்ததால் அவர் முதலாவது போட்டியில் பங்குபற்றுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

எனினும் அவர் முழுமையாக இன்னமும் குணமடைந்திருக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான ஸ்ருவேர்ட் ப்ரோடும் காயமடைந்து அதிலிருந்து குணமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .