2021 ஜனவரி 20, புதன்கிழமை

பாகிஸ்தானிய ரசிகர்களுக்கு இலகுவான வீசா வேண்டும்: பாகிஸ்தான்

A.P.Mathan   / 2012 நவம்பர் 15 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணிக்கும், இந்திய அணிக்குமிடையிலான கிரிக்கெட் போட்டிகளைப் பார்வையிட இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த ரசிகர்களுக்கு இலகுவான வீசா நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாகிஸ்தானின் முன்னாள் தலைவரும், பாகிஸ்தான் சார்பாக அதிக போட்டிகளில் பங்குபற்றியவருமான இன்ஸமாம் உல் ஹக் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், இந்தியாவிற்குப் பயணம் செய்ய விரும்பும் ரசிகர்களுக்கு இலகுவான வீசா நடைமுறையை இந்திய அரசு பின்பற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இந்தியா பின்பற்றவுள்ள பாதுகாப்பு நடைமுறைகளில் தளர்வு ஏற்படாத அதேவேளை பாகிஸ்தானிய ரசிகர்களுக்கு இலகுவான முறையைப் பின்பற்றக்கூடியதுமான திட்டமொன்றை வகுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ரசிகர்கள் இந்தியாவிற்கு வருவதானால் இந்தியாவில் அவர்களுக்கென அனுசரணையாளர் ஒருவர் காணப்பட வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டுவர இந்தியக் கிரிக்கெட் சபை சிந்தித்து வருவதாக வெளியான தகவல்களை அடுத்தே இன்ஸமாம் உல் ஹக் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சர்வதேசக் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவரான இஷான் மணி, பாகிஸ்தானிய ரசிகர்கள் இலகுவான முறையில் வீசாக்களை பெறுவதை உறுதி செய்வது பாகிஸ்தானியக் கிரிக்கெட் சபையின் பொறுப்பு எனத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .