2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

காப்புறுதி செய்யாமையினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு நிதி நெருக்கடி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 16 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடரை காப்புறுதி செய்யாதுவிட்டதால் காப்புறுதிப் பணம் இன்றி ஸ்ரீலங்கா கிரிக்கெட் திண்டாடுகின்றது.

காப்புறுதி செய்யாது விட்டதன் மூலம் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அதிகாரிகள் நிதி ரீதியான மேலும் ஒரு இமாலயத் தவறை புரிந்துள்ளனர்.

பருவமழை காரணமாக பாதகமான வானிலை காணப்பட்ட நிலையில் காப்புறுதி செய்யாதுவிடப்பட்டமை பயங்கரமான சூதாட்டம் எனவும் இதனால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு பல மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் செய்திகள் தெரிவித்தன.

இந்த விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்காக கிரிக்கெட் செயலாளர் நிஷாந்த ரணதுங்க தனக்கு இந்த பிரச்சினை தெரியாது என்றார்.

இதேவேளை தாம் இது தொடர்பாக காப்புறுதி செய்திருப்பதாகவும் அதுவும்  இலங்கை மேச்சண்ட் வங்கியுடன் காப்புறுதி செய்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிர்வாகியான அஜித் ஜயசேகர கூறினார். 

எனினும் இந்த தொடர் எந்த நிறுவனத்திலும் காப்புறுதி செய்யப்படவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .