2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

பங்களாதேஷை தோற்கடித்தது மேற்கிந்தியத் தீவுகள்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், பங்களாதேஷ் அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிபெற்றுள்ளது.

6 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 273 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதன்படி பங்களாதேஷ் அணிக்கு 245 ஓட்டங்கள் என்ற இலக்கு வழங்கப்பட்டது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக கெரன் பவல் 110 ஓட்டங்களையும், டெரன் பிராவோ 76 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக சொஹக் கஷி 6 விக்கெட்டுக்களையும், ரூபெல் ஹொசைன், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

245 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 167 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்களால் தோல்வியடைந்தனர்.

ஒரு கட்டத்தில் 44 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து பலமான நிலையில் காணப்பட்ட அவ்வணி, அதன் பின்னர் விக்கெட்டுக்களைத் தொடர்ச்சியாக இழந்தது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக மகமதுல்லா 29 ஓட்டங்களையும், நயீம் இஸ்லாம் 26 ஓட்டங்களையும், ஷகாரியார் நபீஸ் 23 ஓட்டங்களையும், நசீர் ஹொசைன் 21 ஓட்டங்களையும், ஜூனைட் சித்திக்கி 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக ரீனோ பெஸ்ட் 5 விக்கெட்டுக்களையும், வீரசம்மி பேர்மாள் 3 விக்கெட்டுக்களையும், ரவி ராம்போல் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

மிர்புரில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 527 ஓட்டங்களையும், பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி 556 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக இரண்டு இனிங்ஸ்களிலும் சதமடித்த கெரன் பவல் தெரிவானார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .