2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

டோணியின் கருத்துக்கள் தொடர்பாக ஸ்டீவ் வோ விமர்சனம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய ஆடுகளங்கள் மேலும் சுழற்சியை வழங்க வேண்டுமென இந்திய அணித்தலைவர் மகேந்திரசிங் டோணி தெரிவித்த கருத்தை அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ விமர்சித்துள்ளார். அந்தக் கருத்துத் தயக்கு வியப்பைத் தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்களால் இலகுவாக வெற்றிபெற்ற போதிலும், அப்போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்த டோணி, அம்மைதானம் தொடர்பாக தனது விமர்சனங்களை முன்வைத்தார்.

குறித்த மைதானத்தின் ஆடுகளம் போட்டியின் முதல்நாளிலிருந்தே சுழற்சியை வழங்கவில்லை எனத் தெரிவித்திருந்த டோணி, மைதானப் பராமரிப்பாளர்கள் சுழற்சியை வழங்கும் ஆடுகளங்களை உருவாக்குவது குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள ஸ்டீவ் வோ, தான் 57 போட்டிகளுக்கு அவுஸ்ரேலிய அணிக்குத் தலைமை தாங்கியதாகவும், ஆனால் ஒரு தடவை கூட போட்டியின் ஆடுகளம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக மைதானப் பரமாரிப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

உலகின் சிறப்பான அணிகளுள் ஒன்றாக வரவேண்டுமாயின் ஆக்ரோஷமான அணியாகவும், கள நிலவரங்கள் தொடர்பாகக் கணக்கில் கொள்ளாமல் போட்டிகளை வெல்வது குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்த ஸ்டீவ் வோ, உலகின் முதல்நிலை அணியாக வரவேண்டுமாயின் எல்லாக் களநிலைகளிலும் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .