2021 மே 18, செவ்வாய்க்கிழமை

டுவென்டி டுவென்டி தொடரை ஆரம்பிக்கிறது மேற்கிந்தியத் தீவுகள்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் போன்ற டுவென்டி டுவென்டி தொடரொன்றை நடாத்துவதற்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை முடிவெடுத்துள்ளது.

ஏற்கனவே இது தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்த போதிலும், தற்போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டுவென்டி டுவென்டி தொடரொன்றை நடாத்துவதற்கான ஒப்பந்தமொன்றை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை பார்படோஸைச் சேர்ந்த வங்கியொன்றுடன் கைச்சாத்திட்டுள்ளது.

இந்தத் தொடருக்கான நிதி உதவிகளை வழங்குவதற்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்த டுவென்டி டுவென்டி தொடர் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் கீழ் காணப்படும் தீவுகளிலுள்ள வீரர்களுக்கு நிதி ரீதியிலான உதவிகளையும், அவர்களுக்கு சர்வதேச மட்டத்திலான தரத்தில் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் தலைவர் டொக்ரர். ஜூலியன் ஹன்ரி, இந்த லீக்கில் விளையாடுவதன் மூலம் வீரர்களுக்கான வாய்ப்புக்கள் ஏற்படுவதுடன், வருட ரீதியிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு சர்வதேச மட்டத்த்தில் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறும் எனவும் தெரிவித்தார்.

கரீபியன் தீவுகளின் 6 நகரங்களை அடிப்படையாகக் கொண்ட அணிகள் இப்போட்டிகளில் பங்குபெறவுள்ளதுடன், மேற்கிந்தியத் தீவுகளின் அனேகமான வீரர்கள் இத்தொடரில் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .