2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

இந்திய, பாகிஸ்தான் தொடர் இன்று ஆரம்பம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


புகழ்பெற்ற கிரிக்கெட் மோதல்களில் ஒன்றான இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தொடரொன்று இன்று ஆரம்பிக்கவுள்ளது.
இன்று இடம்பெறவுள்ள டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டியுடனேயே இத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2 டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகள், 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெறவுள்ளது.

இதில் முதலாவது போட்டியாகவே டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டி இடம்பெறவுள்ளது.

பெங்களூரில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இன்று முன்னிரவு 7 மணிக்கு ஆரமபமாகவுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான இப் போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2007ஆம் ஆண்டே இரு அணிகளும் இருநாடுகள் கலந்துகொள்ளும் தொடரொன்றில் மோதின என்பதோடு, 2008ஆம் ஆண்டு மும்பையில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலையடுத்து இரு நாடுகளுக்கிடையிலான அரசியல் உறவுகள் சீர்குலைந்ததன் காரணமாக, சர்வதேசக் கிரிக்கெட் சபையின் தொடர்கள் அல்லது ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் சபையின் தொடர்களில் மாத்திரம் இரு நாடுகளும் சந்தித்து வந்துள்ளன.


மொஹமட் ஹபீஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், மகேந்திரசிங் டோணி தலைமையிலான இந்திய அணியும் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பித்து வைக்கும் இந்தக் கிரிக்கெட் உறவு, இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்ப்புகள்  நிலவுகின்றன.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:

இந்தியா: கௌதம் கம்பீர், அஜின்கியா ரஹானே, விராத் கோலி, ரோகித் சர்மா, யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, மகேந்திரசிங் டோணி, ரவிச்சந்திரன் அஷ்வின், பியூஸ் சாவ்லா, அஷோக் டின்டா, இஷாந்த் சர்மா

பாகிஸ்தான்:
மொஹமட் ஹபீஸ், அஹமட் ஷெஷாத், நசீம் ஜம்ஷெத், சொய்ப் மலிக், உமர் அக்மல், கம்ரன் அக்மல், உமர் அமின், ஷகிட் அப்ரிடி, உமர் குல், சயீட் அஜ்மல், ஜூனைட் கான்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .