2021 ஜனவரி 23, சனிக்கிழமை

இந்திய, பாகிஸ்தான் போட்டியில் இந்திய ரசிகர் மரணம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், இந்திய அணிக்குமிடையிலான 2 டுவென்டி டுவென்டி போட்டிகள் கொண்ட டுவென்டி டுவென்டி தொடரின் முதலாவது போட்டியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த இந்திய ரசிகரொருவர் மரணமடைந்துள்ளார். மாரடைப்பு ஏற்பட்டே அவர் மரணித்துள்ளார்.

நேற்றுப் போட்டி இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது, இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பாகிஸ்தான் அணியின் இனிங்ஸில் 18ஆவது ஓவரில் தனக்கு உடல் நலக்குறைவாக இருப்பதாக அந்த ரசிகர் அங்கிருந்த தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததாகவும், அதன் காரணமாக அவர் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட போதிலும் அவர் மரணமடைந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் ஒடிஷாவைச் சேர்ந்த 47 வயதான கமால் ஜெய்ன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அத்தோடு அவர் பெங்களூரில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மரணம் இயற்கையான மரணம் என்பதால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவித்த பிரதிப் பொலிஸ்மா அதிபரொருவர், அவர் மைதானத்தில் காணப்பட்டமைக்கும், அவரது மரணத்திற்குமிடையில் தொடர்பு கிடையாது எனத் தெரிவித்தார்.

நேற்றைய போட்டியின் இறுதி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .