2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

லஹிரு திரிமன்ன, சுரங்க லக்மால் இலங்கை அணியில்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிட்னியில் ஜனவரி 3ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள 3ஆவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் இளம் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்ன, வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது போட்டியின்போது காயமடைந்த வீரர்களுக்காகவே அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார, விக்கெட் காப்பாளர் பிரசன்ன ஜெயவர்தன, வேகப்பந்து வீச்சாளர் சானக வெலகெதர ஆகியோர் மெல்பேர்ணில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்திருந்தனர். இதில் குமார் சங்கக்கார, சானக வெலகெதர இருவரும் மூன்றாவது போட்டியில் பங்குபற்ற மாட்டார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குமார் சங்கக்காரவிற்கு அவரது இடது கை சுட்டு விரலில் என்பு முறிவும், சானக வெலகெதரவிற்கு பின்தொடைப் பகுதியில் உபாதையும் ஏற்பட்டுள்ளதோடு, பிரசன்ன ஜெயவர்தனவிற்கு கைப் பெருவிரலில் உபாதை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே மூன்றாவது போட்டிக்காக லஹிரு திரிமன்ன, சுரங்க லக்மால் ஆகியோர் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது இலங்கையில் காணப்படும் இவர்களிருவரும் விரைவில் அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களிருவரும் தவிர, அவுஸ்திரேலியாவில் காணப்படும் இலங்கைக் குழாமில் டினேஷ் சந்திமால், நுவான் பிரதீப் ஆகியோருக்கும் மூன்றாவது போட்டிக்கான வாய்ப்புக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .