2025 ஜூலை 19, சனிக்கிழமை

இலங்கை டெஸ்ட் தொடரில் ஷகிப் அல் ஹசன் பங்குகொள்வது சந்தேகம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான சுற்றுத்தொடரின் டெஸ்ட் போட்டிகளில் பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் பங்குகொள்வது சந்தேகமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமாக ஓடுதல் போன்ற காரணங்களுக்காக ஏற்படும் எலும்பு உபாதை ஷகிப் அல் ஹசனுக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே அவர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றுவது குறித்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் போட்டிகளில் பங்குபற்றுவதைத் தற்போதைய நிலையில் குறைக்க வேண்டிக் காணப்படுவதால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பங்குபற்றுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனைகளில் அவருக்கு மிகப்பெரியளவில் உபாதை ஏற்பட்டிருக்கவில்லையெனவும் அவரது உபாதை கட்டுப்பாடான அளவில் போட்டிகளில் பங்குபற்றுகை, உடற்பயிற்சிகள் ஆகியனவற்றுடன் கட்டுப்படுத்தப்படலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் ஒரு டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டியிலும் பங்குபெறவுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டி மார்ச் 8ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X