2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

எனது நுட்பங்கள் இந்திய ஆடுகளங்களுக்குப் பொருத்தமானவை: ஹென்றிக்கஸ்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 20 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது துடுப்பாட்ட, பந்துவீச்சு நுட்பங்கள் இந்திய உபகண்ட ஆடுகளங்களுக்கு அதிகமாகப் பொருத்தமானவை எனத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர், தனது அறிமுகப் போட்டியில் சிறப்பாகப் போட்டிகளில் பங்குபற்ற எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

22ஆம் திகதி சென்னையில் ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய விளையாடும் பதினொருவர் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வணியின் மொய்ஸஸ் ஹென்றிக்கஸ் அவ்வணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னைப் போட்டியில் அதிக சுழற்பந்துவீச்சாளர்கள் தேவைப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், வேகப்பந்துவீசும் சகலதுறை வீரரான மொய்ஸஸ் ஹென்றிக்கஸ் இவ்வணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள மொய்ஸஸ் ஹென்றிக்கஸ், தனது துடுப்பாட்ட, பந்துவீச்சு நுட்பங்கள் இந்திய உப கண்ட ஆடுகளங்களுக்கு அதிகம் பொருத்தமானவை எனவும், அதன் காரணமாகத் தனது அறிமுகப் போட்டியில் சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.

பந்துவீச்சிலும் சரி, துடுப்பாட்டத்திலும் சரி எவ்வாறு ஆட வேண்டுமெனத் திட்டங்களைத் தான் கொண்டிருப்பதாகத் தெரிவித்த மொய்ஸஸ் ஹென்றிக்கஸ், ஏற்கனவே டுவென்டி டுவென்டி போட்டிகளிலும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இந்தியாவில் விளையாடியுள்ள போதிலும், டெஸ்ட் போட்டிகள் வித்தியாசமானவை எனவும், புதிய சவாலுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--