2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

ஆஷஷ் தொடரில் ஜேம்ஸ் பற்றின்சன் இனி இல்லை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 23 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் ஆஷஷ் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பற்றின்சன் இனிமேல் பங்கெடுக்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு ஏற்பட்டுள்ள முதுகு உபாதை காரணமாகவே அவர் பங்கெடுக்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முடிவின் பின்னர் ஜேம்ஸ் பற்றின்சன் தனது இடுப்பு, முதுகுப் பகுதிகளில் வலியை உணர்ந்ததாகவும் அதன் காரணமாக நேற்றையதினம் ஸ்கான் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்கான் பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு உபாதை ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக அவர் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள எஞ்சியுள்ள 3 டெஸ்ட்; போட்டிகளிலும் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்படுகிறது.

இம்முறை ஆஷஷ் தொடரில் 2 போட்டிகளிலும் பங்குபற்றி 7 விக்கெட்டுக்களை மாத்திரம் கைப்பற்றியுள்ள ஜேம்ஸ் பற்றின்சன், துடுப்பாட்டத்தில் ஓரளவு சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தார்.

அவர் துடுப்பாட்டத்தில் 4 இன்னிங்ஸ்களில்  2 ஆட்டமிழக்காத இன்னிங்ஸ்களோடு, 36 என்ற சராசரியின் 72 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

ஜேம்ஸ் பற்றின்சனுக்குக் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக வேறொரு வேகப்பந்து வீச்சாளர் இக்குழாமில் சேர்க்கப்படுவாரா என இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--