2025 ஜூலை 12, சனிக்கிழமை

பிக் பாஷ் லீக்கில் திலகரட்ண டில்ஷான்?

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்ரேலியாவின் டுவென்டி டுவென்டி தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் இலங்கையின் திலகரட்ண டில்ஷான் பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது டெஸ்ற் ஓய்வினைத் தொடர்ந்தே அவர் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

இவ்வாண்டுக்கான பிக் பாஷ் லீக் தொடர் டிசம்பரில் ஆரம்பித்து ஜனவரி வரை இடம்பெறவுள்ள நிலையில், இதற்கு முன்னர் இத்தொடருக்காக டில்ஷான் கருத்திற் கொள்ளப்படவில்லை. ஜனவரி முடிவு வரை திலகரட்ண டில்ஷான் இலங்கை அணிக்காகப் போட்டிகளில் பங்குபற்ற வேண்டியிருக்கும் எனக் கருதப்பட்டது.

ஆனால் தற்போது அவர் டெஸ்ற் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் டிசம்பர் 27ம் திகதி முடிவடைந்ததும் பிக் பாஷ் லீக் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் திலகரட்ண டில்ஷான் 2010௧1ம் பருவகாலத்திற்கான அவுஸ்ரேலிய உள்ளூர் டுவென்டி டுவென்டி தொடருக்காக நியூ சௌத் வேல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த போதிலும், அத்தொடரில் பங்குபற்றியிருக்கவில்லை.

இந்நிலையில் திலகரட்ண டில்ஷான் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதோடு, அந்த கிரிக்கெட் அணியும் அதற்கான விருப்பை வெளியிட்டுள்ளது.

பிக் பாஷ் லீக் தொடரில் ஏற்கனவே இலங்கையர்களான முத்தையா முரளிதரன், லசித் மலிங்க ஆகியோர் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .