2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

இலங்கைக்கெதிரான தொடரில் மொஹமட் இர்பான் இல்லை?

Kogilavani   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்குமிடையிலான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்பான் பங்குபற்ற மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவருக்கு இடுப்பில் சிறியளவிலான என்பு முறிவு ஏற்பட்டுள்ளதாலேயே அவரால் டெஸ்ட் தொடரில் பங்குபற்ற முடியாது போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தென்னாபிரிக்க அணிக்கெதிராக இடம்பெற்ற தொடரின் போது காயமடைந்த மொஹமட் இர்பான், அதன் பின்னர் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற தொடரில் பங்குபற்றியிருக்கவில்லை.

இலங்கை அணி 2 டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகளுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்குச் செல்ல வேண்டியிருந்த நிலையில், டுவென்டி டுவென்டி, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான குழாமில் மொஹமட் இர்பான் இடம்பெற்றிருக்கவில்லை.

எனினும் டிசம்பர் 31ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் போட்டியில் அவர் பங்குபற்றுவார் என்ற நம்பிக்கை காணப்பட்டது. ஆனால் அவரது உபாதை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 6 வாரங்கள் ஓய்வு தேவைப்படும் எனவும், அதன் காரணமாக டெஸ்ற் தொடரில் அவர் பங்குபற்ற மாட்டார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--