2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

மூன்றாம் நாள் முடிவில் அவுஸ்திரேலியா வெற்றியை நோக்கி

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , பி.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றிவரும் இங்கிலாந்து அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான ஆஷஷ் தொடரின் இரண்டாவது போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் அவுஸ்திரேலிய அணி முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
 
ஒரு விக்கெட்டை இழந்து 35 ஓட்டங்களுடன் இன்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, மிற்சல் ஜோன்சனின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்காது 172 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
 
3 விக்கெட்டுக்களை இழந்து 111 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, தனது அடுத்த 7 விக்கெட்டுக்களையும் 24 ஓட்டங்களுக்கே இழந்திருந்தது.
 
துடுப்பாட்டத்தில் இயன் பெல் ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களையும், மைக்கல் காபெரி 60 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எந்த வீரரும் 20 ஓட்டங்களுக்கு அதிகமாகப் பெற்றிருக்கவில்லை.
 
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக மிற்சல் ஜோன்சன் 40 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களையும், நேதன் லையன், பீற்றர் சிடில், ஷேன் வொற்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
398 ஓட்டங்களால் முன்னிலை வகித்த போதிலும், ஃபொலோ ஒன் முறையில் இங்கிலாந்தை ஆடப் பணிக்காது, அவுஸ்ரேலிய அணி துடுப்பெடுத்தாடியது. இதன்படி இன்றைய நாள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களுடன் காணப்படுகிறது.
 
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக டேவிட் வோணர் ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களையும், ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களையும், மைக்கல் கிளார்க் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டர்சன் 2 விக்கெட்டுக்களையும், மொன்ரி பனசர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 570 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், தற்போது அவுஸ்திரேலிய அணி 530 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--