2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

சம்பியன் லீக் அரை இறுதியில் அத்தலட்டிக் மாட்ரிட், பேயர்ன் முனிச்

Super User   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


சம்பியன் லீக் போட்டிகளின் காலிறுதிப் போட்டிகளின் இரண்டாம் சுற்றில் அத்தலட்டிக் மாட்ரிட், பேயர்ன் முனிச் அணிகள் வெற்றி பெற்று  அரை இறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன.


அத்தலட்டிக் மாட்ரிட் அணி பார்சிலோன அணியை 1-0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முதல் சுற்றில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்று போட்டியை சமன் செய்தன. இதன் படி மொத்தமாக 2-1 என்ற கோல்களின் அடிப்படையில்  அத்தலட்டிக் மாட்ரிட் அணி அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. 40 வருட போராட்டத்திற்கு பின்னர் முதற் தடவையாக அத்தலட்டிக் மாட்ரிட் அணி சம்பியன் லீக் தொடரின் அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேயர்ன் முனிச் அணி, மன்செஸ்டர் ஜுனைட்டட் அணியை 3-1 என வெற்றி பெற்றது. முதற்ப் போட்டி இரு அணிகளுக்குமிடையில் 1-1 என முடிவுக்கு வந்தது. இதன் அடிப்படையில் முன்னிலை பெற்ற பேயர்ன் முனிச் அணி அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

அரை இறுதிப் போட்டி விபரங்கள்

செல்சி எதிர் அத்தலட்டிக் மாட்ரிட் - ஏப்ரல் 23
பேயர்ன் முனிச் எதிர் ரியல் மாட்ரிட் - ஏப்ரல் 24


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .