Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.பி.எல் சூதாட்ட பிரச்சினைகளின் வழக்கு விசாரணை இன்று இந்திய உச்ச நீதிமன்றில் நடை பெற்றது. இன்றைய விசாரணையில், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் பொறுப்பை மீண்டும் வழங்குமாறு அந்தப் பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள ஸ்ரீனிவாசன் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. நீதிமன்றம் அதற்க்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதன் போது கருத்து வெளியிட்ட நீதிபதி "இந்திய கிரிக்கெட் சபையினால் அமைக்கப்பட்ட நீதிபதி முட்கள் தலைமையிலான குழுவினால் வழங்கப்பட்ட சீல் செய்யப்பட்ட மூடிய கடித உறையினுள் இருந்த அறிக்கையில் 13 வது பெயராக ஸ்ரீனிவாசனுடைய பெயர் உள்ளது. அவர் மீது 12 குற்றச் சாட்டுகள் அதில் கூறப்பட்டுள்ளன. ஸ்ரீனிவாசன் இந்த குற்றங்கள் தொடர்பில் பெரிதாக முக்கியத்துவம் வழங்கவில்லை" என கூறினார்.
இதேவேளை தனியான விசாரணைக் குழு, சி.பி.ஐ , பொலிஸ், ஊடகங்கள் என்பன வீரர்கள் மீது சேறு பூசுவதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது என கூறிய நீதிபதி பட்னைக் அவர்களின் நற்பெயரும் மதிப்பும் பணயம் வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்காலத்திலும் நாட்டுக்காக விளையாடும் வீரர்கள் எனவும் கூறினார். இதேவேளை மிகுதி 12 பெயர்களும் கிரிக்கெட் வீரர்களுடையது என சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதும் அதை சரியாக உறுதிப்படுத்த முடியவில்லை.
ஐ.பி எல் இன் பிரதம செயற்ப்பாட்டு அதிகாரி சுந்தர் ராமன் தொடர்பில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைதான் முடிவு எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அவரின் குற்றங்கள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது. இந்த நிலையில் தான் சுந்தர் ராமன் தொடர்பில் முடிவு எடுக்க முடியாது என ஐ.பி.எல் இற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள தமிழ் நாட்டு ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமாரின் பதவி இடை நிறுத்தம் தொடர்பாகவும், அவரின் கருத்துக்கள் தொடர்பிலும் இன்று விசாரணை செய்யப்படும் என கூறப்பட்டு இருந்த போதும் அவரின் விசாரணை ஏப்ரல் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே திகதியில் மிகுதி விசாரனைகளும் நடைபெறவுள்ளன.
1 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago