2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஐ.பி.எல் முதற்ப் போட்டியில் கொல்கொத்தா வெற்றி

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதற்ப்போட்டியில் கொல்கொத்தா அணி 41 ஓட்டங்களால் மும்பாய் இந்தியன்ஸ் அணியை இலகுவாக வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை  இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜக்ஸ் கலிஸ் 72(46 பந்துகள் 4 ஓட்டங்கள் 5, 6 ஓட்டங்கள் 3) ஓட்டங்களைப் பெற்றார். மானிஸ் பாண்டி 64(53பந்துகள் 4 ஓட்டங்கள் 6, 6 ஓட்டங்கள் 2) ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் மும்பாய் இந்தியன்ஸ் அணி சார்பாக லசித் மாலிங்க 4(4 ஓவர்கள் 23 ஓட்டங்கள்) விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பாடிய மும்பாய் இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அம்பாத்தி ராயுடு 48(40 பந்துகள், 4 ஓட்டங்கள் 4) ஓட்டங்களைப் பெற்றார். ரோஹித் ஷர்மா 27(20 பந்துகள் 6 ஓட்டங்கள் 1) ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் சுனில் நரையன் 4(4 ஓவர்கள் 20 ஓட்டங்கள்) விக்கெட்களைக் கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக ஜக்ஸ் கலிஸ் தெரிவானார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X