2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

சங்கா, மஹேலவுக்கு எதிராக ஒழுக்காற்று?

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோருக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சபையினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடந்து முடிந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நிறைவுசெய்துகொண்டு நாடு திரும்பிய இவர்கள், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் நேற்று (21) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான தீர்மானத்தை எடுக்குமாறு ஒழுக்காற்றுக்குழுவிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X