2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் வெற்றி

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி டெல்லி டெயார் டெவில்ஸ் அணியை 93 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சுரேஷ் ரெய்னா 56(41 பந்துகள், 4 ஓட்டங்கள் 5, 6 ஓட்டங்கள் 1) ஓட்டங்களையும், டோனி 32 (15 பந்துகள், 4 ஓட்டங்கள் 2, 6 ஓட்டங்கள் 2) ஓட்டங்களையும், டுவைன் ஸ்மித் 29 (28 பந்துகள், 4 ஓட்டங்கள் 3) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜெயதேவ் உனட்கட் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 15.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 84 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜிம்மி நீஷாம் 22 (15 பந்துகள், 4 ஓட்டங்கள் 2) ஓட்டங்களைப் பெற்றார். சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் ஐஸ்வர் பாண்டி, ரவீந்தர் ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக சுரேஷ் ரெய்னா தெரிவு செய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--