2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

மேவெதரை எதிர்கொள்ளும் பேர்ட்டோ

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொக்கி மார்சியானோவின் 49 பதிலில்லா வெற்றிகளை சமப்படுத்தும் முகமாக இதுவரை வெல்லப்படமுடியாதவராக இருக்கும் பிளயொட் மேவெதர், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி அன்ட்ரே பேர்ட்டோவை எதிர்கொள்ளவுள்ளார். 


முன்னாள் 63.5-67 கிலோ கிராம் பிரிவுச் சம்பியனான பேர்ட்டோ, இந்தப் போட்டிக்கு முன் 30 வெற்றிகளையும், 3 தோல்விகளையும் கொண்டுள்ளார். போட்டி நாளன்று ஆச்சரியப்பட வேண்டாம் என்றும், தான் எப்போதும் போல தயார் நிலையில் இருப்பேன் என்று தான் உறுதியளிப்பதாக அவர் கூறியுள்ளார். 

பிரித்தானியாவின் அமீர் கான், மேவெதருடன் செப்டெம்பரில் போட்டியிட விருப்பம் தெரிவித்த போதும், தனது இறுதி ஆறு போட்டிகளில் மூன்றில் தோல்வியைத் தழுவிய பேர்ட்டோவையே மேவெதர் போட்டியிட தெரிவு செய்துள்ளார். 

அமெரிக்க ஒளிபரப்பு நிலையமான ஷோடைம்-உடன், பெப்ரவரி 2013ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட 6 போட்டிகள் ஒப்பந்தத்தின் படி இறுதிப்போட்டி இதுவாகும். மேவேதர் 49வது போட்டியே தான் ஓய்வு பெறுவதற்கு முன் இறுதிப்போட்டி என்று தெரிவித்துள்ளார்.

தனது மகன் தனது ஓய்வுக்கு முன் இரு இலகுவான போட்டிகளையே விரும்புவதாக அவரின் பயிற்சியாளரான தந்தையார் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .