2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

நாளை முதலாவது டெஸ்ட்

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 11 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் காலி மைதானத்தில் இலங்கை நேரப்படி நாளை (12) காலை பத்து மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் இலங்கை அணியின் நட்சத்திரவீரர் குமார் சங்கக்காரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளநிலையில் இப்போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

இது தவிர இறுதியாக இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானுடன், இலங்கை தோல்வியடைந்த நிலையில் இலங்கை அணி அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.

மறுபுறம் கடந்த வருடம் முதல் சிறப்பாக செயற்பட்டு இந்திய அணி சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குறித்த முரளி விஜய் காயம் காரணமாக முதற் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத நிலை, இந்திய அணிக்கு சிறிது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்திய அணியின் டெஸ்ட் தலைவராக பொறுப்பேற்றுள்ள விராத் கோலிக்கு, இந்த தொடரே அவர் தலைவராக பொறுப்பேற்ற பின் எதிர்கொள்ளும் முழுமையான தொடர் ஆகும். ஐந்து பந்துவீச்சாளர்களுடன் ஆக்ரோஷமாக விளையாடும் பாணியை அவர் பின்பற்றினாலும் அவர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு பின் ஓட்டங்களை பெறத் தடுமாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கப்படும் இலங்கையணி – கௌஷால் சில்வா, டிமுத் கருணாரட்ன, குமார் சங்கக்காரா, உபுல் தரங்க, அஞ்செலோ மத்தியுஸ், தினேஷ் சந்திமால், ஜெகான் முபாரக், தம்மிக பிரசாத், ரங்கன ஹேரத், தரிந்து கௌஷால், நுவான் பிரதீப்
எதிர்பார்க்கப்படும் இந்திய அணி – ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மா, விராத் கோலி, அஜிங்கயா ரகானே, விக்கிரிமான் சகா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்பஜன் சிங், அமித் மிஷ்ரா, வருண் ஆரோன், இஷாந்த் ஷர்மா

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .