2021 மார்ச் 04, வியாழக்கிழமை

இவ்வருட 3வது சாதனை நேரத்தை அடைந்த பெல்ப்ஸ்

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சான் அந்தோனியாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய அமெரிக்க சம்பியன்ஷிப் போட்டிகளில் இவ்வருட உலக சாதனை நேரத்தில் 200 மீற்றர் தனிப்பட்ட மெட்லி போட்டியை கடந்துள்ளார்.

வியாழக்கிழமை ரஷ்யாவில் இடம்பெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் 1 நிமிடம் 55.81 செக்கன்களிலேயே சக அமெரிக்கரான ரயான் லொச்டே நீந்திக்கடந்து வெற்றிபெற்ற நிலையில் பெல்ப்ஸ் ஒரு நிமிடம் 54.75 செக்கன்களில் இதே தூரத்தை கடந்திருந்தார்.
நடைபெற்றுவரும் இந்தப்போட்டிகளில் பெல்ப்ஸ் 100 மீற்றர், 200 மீற்றர் பட்டர்பிளை பிரிவுகளிலும் இவ்வருட சாதனை நேரத்தில் நீந்திக் கடந்திருந்தார்.

கடந்த வருடம் குடிபோதையில் வாகனமோட்டியமை காரணமாக ஆறு மாதம் விதிக்கப்பட்ட தடை, 18 மாதங்களுக்கு மது உள்ளெடுக்கின்றாரா என்ற கண்காணிப்பில் உள்ளதாலேயே அவர் உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கவில்லை.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .