2021 மார்ச் 01, திங்கட்கிழமை

இந்தியா முன்னேற்றம்

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலியில் இடம்பெற்றுவரும் இந்திய-இலங்கை அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில், தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ள இலங்கை அணி 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது.

முன்னதாக முதலாம் நாள் ஆட்டமுடிவில் தமது முதலாவது இன்னிங்சில்  128 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட இந்திய அணி 375 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்த இந்திய அணி, இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட  192 ஓட்டங்கள் அதிகமாக பெற்றது. 

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்  ஷிகர் தவான் 134 ஓட்டங்களையும், போர்மில்லாமல் தடுமாறி வரும் அணித்தலைவர் விராத் கோலி 103 ஓட்டங்களையும், விக்கெட் காப்பாளர் ரித்திமான் சகா தனது கன்னி அரைச்சதமாக 60 ஓட்டங்களையும் பெற்றார். தவான் இந்த இன்னிங்ஸின் ஆரம்பத்தில் 4 ஓட்டங்களை பெற்றிருந்த போது  டெஸ்ட் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்திருந்தார்.

பந்துவீச்சில் இலங்கையணி சார்பாக சுழற்பந்துவீச்சாளர் தரிந்து கௌஷால் ஒரு ஓவருக்கு  4.1 என்ற ஓட்டவிகிதத்தில் 134 ஓட்டங்களை வழங்கியிருந்தபோதும் 5 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். மேலும் நுவான் பிரதீப் 3 விக்கெட்களையும், தம்மிக பிரசாத், அணித்தலைவர் அஞ்செலோ மத்தியுஸ் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர். 

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கையணி தமது இரண்டு ஆரம்பத்துடுப்பாட்டவீரர்களையும் இழந்திருந்தது. வீழ்த்தப்பட்ட விக்கெட்களை இரவிச்சந்திரன் அஷ்வினும், அமித் மிஷ்ராவும் வீழ்த்தியிருந்தனர்.

இந்தப்போட்டியில் ஐந்து துடுப்பாட்டவீரர்களோடு களமிறங்கிய இந்திய அணி தவான், கோலிக்கிடையே  பெற்ற 227 ஓட்ட இணைப்பாட்டத்தை தவிர குறிப்பிடும்படியான இணைப்பாட்டமெதனையும் பெறவில்லை. இது ஒரு  கவலையளிக்ககூடிய விடயமாக இருந்தபோதும், இலங்கை அணி முதல் இன்னிங்சில் குறைந்த ஓட்டங்களை பெற்றதால் இப்போட்டியில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .