2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

3ஆவது ஆஷஷ் போட்டிக்கான இங்கிலாந்துக் குழாம் அறிவிப்பு

A.P.Mathan   / 2013 ஜூலை 29 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான சரித்திரபூர்வமான டெஸ்ட் தொடரான ஆஷஷ் தொடரின் மூன்றாவது போட்டிக்கான குழாமை இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. 14 பேர் கொண்ட குழாமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முதலிரு போட்டிகளுக்குமாக அறிவிக்கப்பட்ட 13 பேர் கொண்ட குழாமிலிருந்து ஸ்டீவன் ஃபின், கிரஹாம் ஒனியன்ஸ் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
 
இத்தொடரின் முதலாவது போட்டியில் பங்குபற்றியிருந்த ஸ்டீவன் ஃபின், இரண்டாவது போட்டியில் பங்குபற்றியிருக்கவில்லை. அவருக்குப் பதிலாக ரிம் பிரெஸ்னன் விளையாடும் பதினொருவரில் இடம்பெற்றிருந்தார். கிரஹாம் ஒனியன்ஸிற்கு இத்தொடரில் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை.
 
புதிதாக, துடுப்பாட்ட வீரர் ஜேம்ஸ் ரெய்லர், வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ட்ரெம்லெற், சுழற்பந்து வீச்சாளர் மொன்ரி பனசர் ஆகியோர் இக்குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.
 
இதில், காயத்தின் காரணமாக அவதிப்பட்டுவரும் கெவின் பீற்றர்சனுக்கு மேலதிக வீரராகவே ஜேம்ஸ் ரெய்லர் இணைக்கப்பட்டுள்ளார். 3ஆவது போட்டியில் கெவின் பீற்றர்சன் பங்குபற்ற முடியாது போனால், ஜேம்ஸ் ரெய்லர் பங்குபற்றவுள்ளார்.
 
அறிவிக்கப்பட்டுள்ள குழாம்:
அலஸ்ரெயர் குக், ஜேம்ஸ் அன்டர்சன், ஜோனி பெயர்ஸ்ரோ, இயன் பெல், ரிம் பிரெஸ்னன், ஸ்ருவேர்ட் ப்ரோட், மொன்ரி பனசர், கெவின் பீற்றர்சன், மற் பிரயர், ஜோ றூட், கிறேம் ஸ்வான், ஜேம்ஸ் ரெய்லர், கிறிஸ் ட்ரெம்லெற், ஜொனதன் ட்ரொட்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--