2025 ஜூலை 02, புதன்கிழமை

ஆஸி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 235 ஓட்டங்கள்

Super User   / 2011 செப்டெம்பர் 16 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை அணியுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டமுடிவின்போது அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 235 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அவுஸ்திரேலிய அணியின்ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான கொழும்பு எஸ்.எஸ். மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் இலங்கை அணி வெற்றிபெற்றது. அதையடுத்து அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணிக்கப்பட்டது.

ஷேன் வட்ஸன் (8), பிலிப் ஹியூஜ்ஸ் (0) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர். எனினும் ஷோன் மார்ஷ் நிதானமாக துடுப்பெடுத்தாடி 81 ஓட்டங்களைப் பெற்றார். ரிக்கி பொன்டிங் 48 ஓட்டங்களைப் பெற்றார். ஆணித்தலைவர் மைக்கல் கிளார்க் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஆட்டமுடிவின்போது மைக் ஹஸி 69 ஓட்டங்களுடனும் பிரட் ஹடின் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை அணி பந்துவீச்சாளர்களில் சுரங்க லக்மால், சமிந்த எரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டி இலங்கை வீரர் குமார் சங்கக்காரவின் 100 ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .