2021 மார்ச் 01, திங்கட்கிழமை

5 ஆவது ஒருநாள் போட்டியிலும் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி

Super User   / 2010 ஒக்டோபர் 17 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நியூஸிலாந்து அணியுடனான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் இத்தொடரை 4-0 விகிதத்தில் வென்று பங்களாதேஷ் அணி  புதிய வரலாறு படைத்துள்ளது.

சற்றுமுன் நிறைவடைந்த 5 ஆவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 3 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2 இரண்டாவது போட்டி மழையினால் கைவிடப்பட்டது. ஏனைய 4 போட்டிகளிலும் பங்களாதேஷ் அணியே வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பிரதான அணியொன்றுக்கு எதிராக ஒருநாள் சர்வதேச சுற்றுப்போட்டியொன்றில் பங்களாதேஷ் அணி அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

இன்று பங்களாதேஷின் மீர்பூர் நகரில் நடைபெற்ற 5 ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 44.2 ஓவர்களல்  174 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.  

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 49 ஓவர்களில் 171 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இப்போட்டியில் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பங்களாதேஷ் அணி வீரர் ருபெல் ஹொஸைன் போட்டியின் சிறப்பாட்டக் காரராகத் தெரிவானார். அவ்வணியின் தலைவர் சகீப் அல் ஹசன் சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
 


  Comments - 0

  • G.Pramanathan Sunday, 17 October 2010 11:14 PM

    பங்களாதேஷ் அணிக்கு வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    Thilak Sunday, 17 October 2010 11:16 PM

    ஆனைக்கொரு காலம் என்றல் பூனைக்கொரு காலம் என்பது இதைத்தான்.

    Reply : 0       0

    nnassm Monday, 18 October 2010 12:24 AM

    யானையும் இல்லை பூனையும் இல்லை ,திறமை இருந்தால் வெற்றி எப்போதும் உண்டு.

    Reply : 0       0

    Rishad Monday, 18 October 2010 09:34 PM

    ஆமா நாய் எங்க?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .