Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஜனவரி 21, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூலை 19 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட்டின் மத்திய, மாநில மட்டங்களில் பரந்த அம்சங்களை உள்ளடக்குகின்ற லோதா செயற்குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளை இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
குறித்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு, நான்கு மாதங்கள் தொடக்கம் ஆறு மாதங்கள் வரையிலான காலக்கெடுவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு விதித்துள்ள உச்ச நீதிமன்றம், குறித்த மாற்றத்தை மேற்பார்வை செய்வதற்கு, லோதா அறிக்கையின் காரணகர்த்தாவான, இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசரான ஆர்.எம் லோதாவை நியமித்துள்ளது.
குறித்த வழக்கினை ஜனவரி முதல் விசாரித்து வந்த இந்திய பிரதம நீதியரசர் டி.எஸ்.தாகூர், நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா ஆகியோரை உள்ளடக்கிய இரண்டு நீதிபதிகள் குழாம், திங்கட்கிழமை (18) பிற்பகலில் மேற்குறித்த உத்தரவை வழங்கியிருந்தது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தேர்தலின்போது, ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வாக்கையே கொண்டிருத்தல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பதவிகளில், அமைச்சர்கள் மற்றும் அரச பணியாளார்கள் இருக்க முடியாது, 70 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும், மாநிலச் சங்கங்களிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிலும் பதவி வகிக்க முடியாது, 3, மூன்று வருட பதவிக்காலங்களுக்கு மேல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் பதவி வகிக்க முடியாது, எந்தவொரு அதிகாரியும் தொடர்ந்து பதவி வகிக்க முடியாது ஆகிய பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
தகவலறியும் சட்டமூலத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையை கொண்டுவருதல், சூதாட்டத்தை இந்தியாவில் சட்டரீதியாக அங்கிகரித்தல், போட்டிகளின் ஒளிபரப்புகளிடையே தொலைக்காட்சி விளம்பரங்களை கட்டுப்படுத்துதல், முன்மொழியப்பட்டுள்ள வீரர்கள் சங்கத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நிதியளித்தல் ஆகிய பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago