Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kamal / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் தன்னிம் உள்ளதென தெரிவிக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாச, தன்னை வேட்பாளராக அறிவிக்க கோரி முன்னெடுக்கும் போராட்டத்திலிருந்து அடியேனும் பின்வாங்க போவதில்லை எனவும் தெரிவித்தார்.
அதனால் பிரதமர், சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஆசிர்வாதத்துடனேயே தான் தேர்தலில் களமிறங்க முன்வருவேன் எனவும் தெரிவித்தார்.
ஐக்கியத் தேசியக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,
நாட்டை முன்னேற்றும் செயற்திறன் மிக்க வேலைத்திட்டம் ஒன்று தன்னிடத்தில் உள்ளதெனவும், பொதுமக்கள் வயிற்றுப்பசி இல்லாமல் வாழ்க்கைச் சூழல் ஒன்றை உருவாக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், நாட்டின் வருமானம் ஒரு குடும்பத்துக்கு மாத்திரம் பயனளிப்பதாக இருக்க கூடாதெனவும், சாதாரண மக்கள் கைகளில் நாட்டின் வருமானம் சென்றடைய வேண்டுமெனவும் தெரிவித்தார்.
தன்னை பற்றி சிலர் தவறான் பிரசாரங்களை மேற்கொள்வதாக தெரிவித்த அவர், ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னர் 10 முறை தன்னை பிரதமராக பதவியேற்று கொள்ளுமாறு கூறிய போதும், 52 நாள் அரசாங்கத்தில் 60 முறை அழைப்பு விடுக்கப்பட்ட போதும் தான் ஏற்கவில்லை எனவும், பின்கதவால் பதவியேற்கத் தான் ஒருபோதும் தயாரில்லை எனவும் தெரிவித்தார்.
அதனால், மக்கள் தோல்களின் மீது ஏறிதான் இலக்கை நோக்கி பயணிப்பேன் என்றும், கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்க வேண்டுமெனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதனால் சூழ்ச்சிகளால் அரசியல் செய்யப்போவதில்லை எனவும், சிலரால் தனது நேர்மையை பொறுத்துகொள்ள முடியாத நிலைமை காணப்படுவாதாகவும், தான் பிறந்த நாள் முதல் தந்தையின் பழக்கம் தனக்கு தொற்றிக்கொண்டதெனவும் தெரிவித்தார்.
அதனால் செல்வந்தர்கள் தன்னை எதிர்த்தாலும் சாதாரண மக்கள் தன்னை ஏற்றுகொள்வர் எனத் தெரிவித்த அவர், பின்கதவால் பதவி வகிக்க விரும்பாத தான் வெற்றிபெற்ற பின்பும் அரச மாளிகைகளில் குடியிருக்க போவதில்லை எனவும், பொது மக்களுடன் வீதியிலேயே இருப்பேன் எனவும் தெரிவித்தார்.
அதேபோல் எந்த மோசடியும் இல்லாத தன்னை வேட்பாளராக களமிறக்க தயங்குவதன் நோக்கம் தனக்கு புரியவில்லை எனவும், 71 முறை தனது தலைவரை காப்பாற்றிய தனக்கு கட்சி மீது அந்த பற்று உள்ளதெனவும் தெரிவித்தார்.
அவ்வாறிருக்க தன்னை வேட்பாளராக அறிவிக்க எவ்வளவு தயங்கினாலும் ஒரு அடியேனும் பின்வாங்கபோவதில்லை எனவும் தெரிவித்தார்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago