Editorial / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மின்சார சபை மற்றும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு கிடையிலான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையிலும், அமைச்சரவைக் கூட்டங்கள் தான் பங்கேற்க மாட்டேன் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்யைய அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சார சபைக்கு எதிராக, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, வழக்குத் தாக்கல் செய்துள்ளமை தொடர்பில், கருத்துரைத்த ஜனாதிபதி, அரச நிறுவனமொன்று மற்றுமொரு அரச நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் அந்த நிறுவனம் சரிவடையும் அதேபோல, நுகர்வோர் பெரும் துன்பங்களுக்கு உள்ளாவார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது.
அப்படியாயின் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார்.
இதனிடையே, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக் கூட்டத்தின் போது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026