2020 ஜனவரி 21, செவ்வாய்க்கிழமை

அம்பாறை, பாலமுனை பகுதியில் வெடிப்பொருள்கள் மீட்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வசந்த சந்திரபால, எம்.ஏ.றமீஸ்

அம்பாறை, பாலமுனை பகுதியில் இருந்து வெடிப்பொருள்கள் சில இன்று (18) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 ரி - 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் வெடிப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் இராசாய பொருள்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த வெடிப்பொருள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றக்கட்டுள்ளன.

இதேவேளை, பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி குறித்த பகுதியில் தொடர்ந்து அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .