Editorial / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
35 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இரண்டு எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவை இரண்டும் நிராகரிக்கப்பட்டதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், அன்றைய தினம் முற்பகல் 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இன்று முதல் 7 நாட்களுக்கு பேரணிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீறி பேரணிகள் நடத்தப்பட்டால் நீதிமன்றுக்கு அறிவிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.
1 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago
9 hours ago