2020 ஜூன் 07, ஞாயிற்றுக்கிழமை

கட்சித் தலைவர்களுடன் சஜித் முக்கிய சந்திப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 14 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களை இன்று இரவு அமைச்சர் சஜித் பிரேமதாச சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது சிறுபான்மை கட்சிகளின் இணக்கப்பாடுகளை பெற்றுகொண்டதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு அறிவுருத்தி இருந்தார்.

இந்நிலையில் இன்று இரவு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்க உள்ளிட்ட ஐ.தே.முவில் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்களுடனான பேச்சுவார்தையை அமைச்சர் சஜித் பிரேமதாச முன்னெடுக்க உள்ளதாக தெரிய வருகிறது. 

எவ்வாறாயினும், இந்த சந்திப்பின் பின்னர் மீண்டும் பிரதமர்  - அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெறும் என்றும் அறிய முடிகிறது.

இவ்வாறிருக்க, ஐ.​தே.க உறுப்பினர்களுடான சந்திப்பொன்று (13) இரவு அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றதாக அறிய முடிகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X