2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மின் இணைப்பு; 1937 பேருக்கு எதிராக வழக்கு

Editorial   / 2020 ஜூலை 01 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொண்ட 1937 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, அபராத தொகையாக 59 மில்லியன் ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

2019 மே மாதம் தொடக்கம் இவ்வருடத்தின் மே மாதம் வரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இலங்கை மின்சார சபையின் விசாரணை குழு மற்றும் பொலிஸார் இணைந்து இதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுக் கொள்ளப்படுவதால் இலங்கை மின்சார சபைக்கு 100 மில்லியன் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--